பத்திரிக்கை செய்தி

தமிழக மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும், தன் சந்ததியையும் காப்பதற்காக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அதன் சுற்றுபுர கிராமங்களை சார்ந்த மக்கள் ஜனநாயக முறையில் போராடி வருகின்றனர். இந்த நீண்ட போராட்டத்தில் மக்கள் எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல் ஜனநாயகத்தின் அடிபடையில் நின்றது வரலாற்றில் புதிது. அத்தகைய ஜனநாயக போராட்டத்தை இந்திய அரசு தொடர்ச்சியாக கொச்சை படுத்திவருவது மட்டுமின்றி போராடும் மக்களுக்கு எதிராக ஒரு கருத்து பயங்கரவாத்தத்தை ஏவி, போராடும் மக்களை தமிழகத்தின் ஏனைய மக்களிடம் இருந்து தனிமைபடுத்தியுள்ளது. தமிழக அரசோ மக்களின் அச்சம் தீர்க்கபடும் வரை அணு உலையை திர்க்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே முப்படைகளையும் இறக்கி போராடும் மக்களை முற்றுகையிட்டது. ஜனநாயக வழியில் போராடிய மக்களுக்கு எதிராக 7000க்கும் மேற்பட்ட துனை இராணுவபடை உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய படையை இறக்கி மக்களை அச்சுறுத்தி அணு உலையை திறக்கும் பணிகளை தொடங்கியது. அதுமட்டுமின்றி போராட்ட குழுவில் இடம்பெற்று இருந்த 18 பேரை கைது செய்ததும், அதனை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டபுளி கிராம மக்கள் 178பேரை கைது செய்து அவர்கள் மீது 121 தேசத்திற்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கு போட்டது அரசு. அதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர், மேலும் ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை நசுக்கியது. அதன் பிறகு 55,000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகளும் அதில் 3600க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசதுரோக வழக்கு போடப் பட்டுள்ளது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

அணு உலைக்கு எதிரான இப்போராட்டத்தை திசைதிருப்பும் விதமாக இந்திய அரசு முதலில் போராடும் மக்கள் வெளிநாட்டினரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு போராடுவதாக அவதூறு பரப்பியது. பின்பு போராட்டக்குழுவிற்கு தீவிரவாத சாயம் பூசுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது இந்திய அரசு. அதன் ஒரு கட்டமாக மார்ச் 19ஆம் தேதி தோழர் முகிலன் அவர்களை ஈரோடு அருகில் வைத்து கடத்தல் பாணியில் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்து பின் 21ஆம் தேதி கூடங்குளம் பகுதியில் வைத்து கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. தோழர் முகிலன் ஒரு வருடகாலமாக போராடும் மக்களுடனே தங்கி இருந்தவராவார். அடுத்து மார்ச் 23ஆம் தேதி அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கண்டித்து நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது அதில் வைகோ, சீமான், வேல்முருகன், கொளத்தூர் மணி, வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் உள்ளிட்ட 2000 பேர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின் மாலை விடுவிக்கப்பட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் இருந்து சென்று கலந்துகொண்டு மாலை விடுவிக்கப்பட்டபிறகு மண்டபத்தை விட்டு வெளியில் வந்த பொழுது இரண்டு சுமோக்களில் வந்த ரவுடிகள் போல் தோற்றமளித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீஷ்குமாரை அடித்து தூக்கி சென்றனர், இது இலங்கையில் நடக்கும் வெள்ளை வேன் கடத்தலை எங்களுக்கு நினைவூட்டியது, உடன் இருந்த தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறையின் இணை ஒருங்கிணைப்பாளர் அருண்சோரியும் மற்ற இரு தோழர்களும் பலமாக தாக்கப்பட்டார்கள். மண்டபத்தில் இருந்த வைகோ, சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகே காவல்துறை தான் தான் கைது செய்தது என ஒப்புக்கொண்டது. தோழர் சதீஷ்குமார் மீது 143, 188, 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு நெல்லை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு சிலநாட்களுக்கு பிறகு பிரிவு-121 தேசத்திற்கு எதிராக போர் தோடுத்ததாக மேலும் ஒரு பொய் வழக்கு சேர்க்கப்பட்டது. மேலும் அவர்களின் பிணை மீதான வழக்கு விசாரணை சட்டவிதிகளை எல்லாம் மதிக்காமல்  பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு பின் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும், செசன்ஸ் நீதிமன்றத்திலும் பிணை மறுக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 26/04/12 வியாழன் அன்று பிணை வழங்கப்பட்டது. ஆனால் பிணை கிடைக்கப்போகும் சூழல் வந்தவுடன் அவசர அவசரமாக மேலும் ஒரு புதிய பொய் வழக்கு ஒன்றை செவ்வாய்கிழமை அன்று புனைந்து அவர்கள் விடுதலையாவதை தடுத்துவிட்டது, மேலும் இது போன்ற வழக்குகள் தொடர்ச்சியாக புனையப்படும் என்றே தெரிகின்றது. இந்த ஜனநாயகத்திற்கு எதிரான செயலை கண்டித்து பொய் வழக்குகளை உடனே வாபஸ் வாங்ககோரியும், புதிய பொய் வழக்குகள் போடக்கூடாது என்று கூறியும் தோழர் சதீஷ்குமாரும், தோழர் முகிலனும் திருச்சி சிறையில் நான்காவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை புலிகள் என்று சித்தரிப்பதும், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நக்சலைட் என்று சித்தரிப்பது இந்திய அரசின் வாடிக்கையாகி வருகின்றது, இதன் அடிப்படையிலேயே தோழர்கள் சதீஷ்குமார், முகிலன், வன்னியரசு போன்றவர்கள் நக்சலைட்டுகள் என்றும் போராட்டகுழுவினருக்கு நக்சலைட் தொடர்பு இருக்கிறது எனவும் ஒரு பொய் சித்திரத்தை உருவாக்க முயலுகிறது அரசு. மக்கள் மீதான இந்த ஜனநாயகமற்ற ஒடுக்குமுறையை தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை வன்மையாக கண்டிப்பதுடன் மாநில, மத்திய அரசுகளுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறது. அவை,

  1. தோழர்கள் சதீஷ்குமார் மற்றும் முகிலன் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற்று அவர்களை விடுதலை செய்.
  2. போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள் திரும்ப பெறு.
  3. ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரவாதிகளாக சித்தரித்து ஒடுக்கும் இந்த இராணுவ ரீதியிலான ஆட்சி முறையை உடனே நிறுத்து.

நன்றி

                           இப்படிக்கு

                           அருண்சோரி

     இணை ஒருங்கிணைப்பாளர் 

Advertisements

About tiepasarai

Thamizaga Ilainjar Ezuchi Pasarai
This entry was posted in பகுக்கப்படாதது. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s