தெருமுனைக் கூட்டம் – “ஈகியரை நெஞ்சில் ஏந்துவோம்! இந்திய ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்”

மாவீரன் தோழர் முத்துகுமாரின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடந்த 28-01-2012 சனிக்கிழமை மாலை தமிழக இளைஞர் எழுச்சி பாசறை சார்பில் வடபழனி சிவன் கோவில் எதிரே “ஈகியரை நெஞ்சில் ஏந்துவோம்! இந்திய ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்”  என்ற தலைப்பில் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்களுக்கும், மொழிப்போர் ஈகியர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் தெரு முனை கூட்டம் நடத்தப்பட்டது.. முத்துகுமார் நினைவு நாளான 29-01-2012 அன்று பல்வேறு நிகழ்சிகள் இருந்ததால், ஒரு நாள் முன்னதாக நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு தோழர் தமிழருவி மணியனின் கணீர் குரலில் பதிவு செய்யப்பாட்ட முத்துகுமாரின் இறுதி கடதத்தின் ஒலி தகடு 5.15 மணிமுதல் 4 முறை திரும்ப திரும்ப ஒலி பரப்பப்பட்டது. முத்துக்குமாரின் வைர வரிகள் தோழரின் குரலில் கேட்பவரின் நெஞ்சை கிழித்தது. கடந்து சென்றவர்களை எல்லம் நின்று கேட்க வைத்தது.

முத்துகுமாருக்காக வீர வணக்க கூட்டம் ஒலி வடிவம் பெற்று முத்துகுமாரின் இறுதி உரையுடனே ஆரம்பமானது சிறப்பான துவக்கமாக அமைந்தது. பின்னர் தமிழக இளைஞர் எழுச்சி பாசறையை சேர்ந்த தோழர் அருன்ஷோரி  தலைமையில் தோழர் காளிதாசின் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. தலைமை உரை ஆற்றிய அருன்ஷோரி இந்த கூட்டத்தின் தேவைப் பற்றியும், ஈகி முத்துகுமாரின் ஈகத்தைப் பற்றியும் சுருக்கமாக கூறி தனது பேருரையின் முதல் பகுதியை முன்னுரை போல முடித்து சிறப்புரை ஆற்ற வந்த தோழர்களுக்கு வழியை விட, முதலில் மக்கள் ஜனனாயக இளைஞர் அணியை சேர்ந்த தோழர் ராஜராஜன் பேச வந்தார். அவர் கூட்டத்தின் தலைப்புக்கேற்றார் போல் இந்தி தினிப்பு முதல் கூடங்குளம் வரை அனைத்து பிரச்சனைகளையும் கூறி இந்திய ஆதிக்கத்தை அடித்து நொருக்கி ஈகியர்களுக்கு தன் வீர வணக்கத்தினை சமர்ப்பித்தார்.

பின்னர் பேசிய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த தோழர் பாரதி அவர்கள், இந்தி தினிப்பின் வரலாற்றையும், அதை எதிர்த்து நம் ஈகியர்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும், வரலாற்று தரவுகளுடன், தெளிவாக விளக்கினார். இந்தி தினிப்பின் பின் உள்ள அரசியலையும், சட்ட நுணுக்கங்களையும், இந்தி எதிர்ப்பின் இன்றைய தேவையையும், தமிழ் தேசியத்தின் அவசியத்தையும் விளக்கிய விதம் கூட்டத்தை கடந்து சென்றோரையும்நின்று கேட்க வைத்தது. அந்த வழியாக சென்ற பலர் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் பேச்சை கேட்டனர்.

அடுத்து பேசிய பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் தமிழ்செல்வன் அவர்கள் இந்தி எதிர்ப்பு ஏன்?. இந்தி ஆதிக்கம், தமிழ் வழிக் கல்வியின் அவசியம் ஆகியவற்றைப் பற்றி மிக எளிய உதாரணங்களுடன் விளக்கியது சிறப்பாக அமைந்தது.

அடுத்து வந்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்த தோழர் அருணபாரதி முத்துகுமார் முதல் முல்லை பெரியாறு வரை ஈழம் முதல் இன்று வரை அனைத்து பிரச்சனையிலும் இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை தோலுரித்ததுடன், தமிழ் தேசியத்தின் அவசியத்தையும், அதில் ஜாதி ஒழிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

அடுத்து வந்த தமிழக இளைஞர் கழகத்தை சேர்ந்த தோழ தங்கதமிழ்வேலன் தனக்கே உரிய முறையில் முத்துகுமாரின் இறுதி கடதத்தை ஒவ்வோரு பகுதியையும் எடுத்து விளக்கி ஈழ பிரச்சனை, மீனவ பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, பென்னி குயிக், என முத்துகுமாரின் தெளிந்த வரலாற்று புரிதலையும் சமூக பார்வையையும் விளக்கியத்தோடு, கூடங்குளம் பிரச்சனையையும் அதன் அரசியல் பின்னனி பற்றியும், முல்லை பெரியாறு பிரச்சனையும், அதில் இந்திய அரசின் போலி தனத்தையும் அடித்து நொறுக்கினார்.

அனைத்து பேச்சாளர்களின் முடிவிலும், அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து இடையிடையே தன் கருத்துக்களையும் கலந்து பேசி அமர்ந்த அருன்ஷோரி இறுதியாக தன் உரையில் தானே புயல் வரையிலான அனைத்து பிரச்சனைகளிலும் இந்திய வல்லாதிக்கத்தின் மக்கள் விரோத, தமிழ் விரோத போக்கை அடித்து நொறுக்கி அமர தமிழக இளைஞர் எழுச்சி பாசறையின் தோழர் மணிகன்டன் நன்றியுரையையுடன் இரவு 9.45 மணிக்கு கூட்டம் முடிந்தது, அனைத்து பேச்சாளர்களும் இளைஞர்களாக இருந்தது இந்த கூட்டத்தின் சிறப்பம்சமாகும். கூட்டத்தினைப் பார்த்த பல பொது மக்களும் இதை குறிப்பிட்டு எங்களிடம் பேசியது மகிழ்ச்சியை அளிக்கிறது.

“ஈகியர்களுக்கு வீர வணக்கம், இந்திய ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்”

-வினோத்குமார்

Advertisements

About tiepasarai

Thamizaga Ilainjar Ezuchi Pasarai
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s